திருச்சியில் TNCSC தொழிற்சங்க ஆலோசனை கூட்டம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சியில் TNCSC தொழிற்சங்க ஆலோசனை கூட்டம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊதிய நிர்ணயம் – தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு
TNSCSC சுமைதூக்கும் தொழிலாளர் மாநில பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
TNCSC சுமைதூக்கும் தொழிலாளர் மாநில பாதுகாப்பு சங்க மாநில பொதுகுழு கூட்டம் மேலப்புதூர் மரியன்னை ஆலய வளாகத்தில் மாவட்ட செயலாளர் சதிஷ் தலைமையில் நடைபெற்றது.
மாநில தலைவர்
வீரராகவன், மாநில பொதுசெயலாளர் சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் கீழே குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
FCI சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்திற்க்கு வழங்குவது போல் TNCSCசங்க தொழிலாளர்களுக்கும் ஊதிய நிர்ணயம் வழங்க வேண்டும்,
தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதை செயல்படுத்த வேண்டும்,
கல்வி தகுதியில் பணியாளர் நியம்னம் செய்ய வேண்டும்,
காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும்.
தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யப்படும்
உள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேவேந்திரன், கமலநாதன், அன்ன கொடி, வாலாஜாகிருஷ்ணன்,
குழந்தைவேல், தர்மராஜ், சரவணன்,செல்வராஜ், குமார்,,தாஸ், செல்வம் கனேசன் , ரவி, மல்லைய்ன் உட்பட மாநில மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.