திருச்சியில் தொடர்மழை. விபத்து ஏற்படும் விதத்தில் தெரு சாலைகள்.
திருச்சியில் தொடர்மழை. விபத்து ஏற்படும் விதத்தில் தெரு சாலைகள்.
திருச்சியில்
மூன்றாவது நாளாக தொடரும் மழை.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு . சாலைகள் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீர்.
திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் கனமழை தொடரும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி,
நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
திருச்சி மாநகரிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பழக்கடை தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட வியாபாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பஸ் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. திருச்சியில் கருமண்டபம், ஆர்.எம்.எஸ்.காலனி, மாருதி நகர் போன்ற பகுதியில் தாழ்வான பகுதியில் அதிக அளவில் தேங்கியுள்ளது. சுப்ரமணியபுரம், ரஞ்சித் அப்புறம் பகுதிகளில் கற்களால் ஆன சாலைகள் பெயர்ந்து மேடு பள்ளமாக உள்ளது, இதனால் விபத்துகள் நடைபெறும். வாய்ப்பு அதிகம் உள்ளது
இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் நோய் பரவும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.