கடும் கட்டுப்பாடு எதிரொலி :சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் தயக்கம்.
கடும் கட்டுப்பாடு எதிரொலி :சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் தயக்கம்.
கொரோனா பரிசோதனை
மையங்களில் ஐயப்ப பக்தர்கள்.
கேரள மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அந்த மாநில அரசு வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதில் சாமி தரிசனம் நேரத்திற்கு முன்னதாக 24 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து பெறப்பட்ட வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு கிளம்புமுன் பரிசோதனையை எடுத்து வருகின்றனர் இந்த பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்ததனர்.
இதனைத்தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
அவ்வாறு பரிசோதனை செய்து கொள்ளும் பக்தர்கள் முடிவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கேரள எல்லைக்குள் சென்று விட வேண்டும்.
இல்லையெனில் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முகாமில் 650 ரூபாய் பணம் கட்டி பரிசோதனை செய்து கொண்டு ரிசலட்டுடன் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை உள்ளது.
ஒர் பஸ்ஸில் திருச்சியில் இருந்து 40 ஐயப்ப பக்தர்கள் சென்று நிலக்கல்லில் பரிசோதனை எடுக்கும்போது அதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் அனைவரும் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறப்படுகிறது..
இதனால் இந்த வருடம் பெரும்பாலான ஐய்யப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சென்று வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.