Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்வே கிராசிங் கேட் தொடர்ந்து செயல்பட பொதுமக்கள் வலியுறுத்த உள்ளனர்.

0

பேட்டவாய்த்தலையை சுற்றியுள்ள
கோட்டையார்தோட்டம், 4 ரோடு, திருச்சாப்பூர், சங்கமடை, பங்களாபுதூர், காசாகாலனி, இனுங்கூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராம மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.

நாளை (04/12/2020) காலை பேட்டவாய்த்தலை மில்கேட் ( இரயில்வே கேட்) மூடப்பட உள்ளது.

ஒரு முறை இந்த கேட் மூடப்பட்டால் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

(இலாலாப்பேட்டை கேட்டின் நிலையும் இதுதான்.)

நாளை காலை 7 மணியளவில் இந்த கேட் வழியாக பயன்பெறும் அனைவரும் ஒன்றுகூடி தங்களது நிலையை இரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்த இருக்கிறோம்.

எனவே சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து நாளை காலை 7 மணிக்கு பேட்டவாய்த்தலை மில் கேட் அருகே பொதுமக்கள் அனைவரும் கூட வேண்டுமாய் சமூக ஆர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.