உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.70 அடி உயர கொடி கம்பம் திறந்துவைத்தார் கே.என். நேரு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.70 அடி உயர கொடி கம்பம் திறந்துவைத்தார் கே.என். நேரு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை தேவராயநேரியில், 70 அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியினை, கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு ஏற்றி வைத்தார் .
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .