அறம் மக்கள் நல சங்கம் பொதுச் செயலாளர் எஸ். ஆர். கே. பிறந்தநாள் கொண்டாட்டம்
அறம் மக்கள் நல சங்கம் பொதுச் செயலாளர் எஸ். ஆர். கே. பிறந்தநாள் கொண்டாட்டம்
அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ் குமார் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அறம் மக்கள் நலச்சங்கம் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திண்டுக்கல்,பெரம்பலூர் உள்ளிட்ட தமிழக்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான நிர்வாகிகளைக்கொண்டு அறம் மக்கள் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்களும், பொதுச்செயலாளராக மக்கள் சேவகர் ரமேஷ்குமார் அவர்களும் செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் அவர்களின் 37 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
மன்னார்புரம் அறம் மக்கள் நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர்.சு.ராஜா, மாநில துணைத்தலைவர்கள் சாஹுல் ஹமீது, இளங்கோவன், பால்ராஜ், மாநில இணைச்செயலாளர் அறிவுமணி, மாநில பொருளாளர் பாபு, மாநில அமைப்புச்செயலாளர் பாதுஷா, மாநில துணைச்செயலாளர்கள் ராஜப்பா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.