திருச்சி ஸ்ரீ ஐயப்ப சங்கம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :
01. கரோனா ஊரடங்கு காரணமாக சபரி மலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் கோர்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் நேரம்: காலை மணி 07:10 முதல் 10:00 மணி வரை. மாலை மணி 06:00 முதல் 08:00 மணி வரை,
02. இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும்
03. அரசாங்கம் அறிவித்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தலும், முகக்கவசம் அணிதலும் மிக அவசியம், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளே செல்ல இயலாது
நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்