Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய கோவிந்தராஜு கோரிக்கை.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய கோவிந்தராஜு கோரிக்கை.

0

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனை கூட்டம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் பற்றி வியாபாரிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு விளக்கிப் பேசினார் இந்த கூட்டத்தில் அனைத்து அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
1).
காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் கமிஷன் கடைகள் இரவு ஒன்பது மணிக்கு துவங்கி அதிகாலை 5 மணி வரை வியாபாரம் செய்ய வேண்டும்.

2).
காய்கறி சில்லரை வியாபாரிகள் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்.

3).
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் மற்றும் காய்கறி சுமைகளை ஏற்றி இறக்க வேண்டும் மற்ற நேரங்களில் அனுமதி இல்லை.

4)
குறிப்பிட்ட வியாபார நேரங்களில் மட்டும் வியாபாரங்களை முடித்துக்கொண்டு மதியம் 2 மணிக்கு கடைகளை முடித்துவிட்டு தூய்மைப் பணிக்காக மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வியாபாரிகளும்,  பொதுமக்களுக்கு கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

போலீஸ் எச்சரிக்கை,
திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட வர்த்தக பகுதிகளுக்கு சுமைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு பகல் நேரத்தில் மாநகருக்குள் அனுமதி இல்லை. வாகனங்களில் இருந்து சுமைகளை இறக்கி, ஏற்றுவதற்கும் பகல் நேரத்தில் அனுமதியில்லை.

நாளை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மட்டுமே வாகனங்களில் இருந்து சுமைகளை இறக்கி, ஏற்றலாம் என்று திருச்சி மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.