டிச- 1 ஆம் தேதி முதல் தரச்சான்று உள்ள ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
டிச- 1 ஆம் தேதி முதல் தரச்சான்று உள்ள ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்திய தர நிர்ணய பிரிவில் இருந்து சான்று அளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவருமே கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு வாகன ஓட்டிகளுக்கு மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் BIS தரம் உள்ள ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
இதனால் தற்போது தரமற்ற ஹெல்மெட் அணிகிறீர்கள் என்றால் அதை உடனடியாக மாற்றுவது அவசியம்.
மேலும் தரமற்ற BIS தரச்சான்று பெறாத ஹெல்மெட்டுகளை கடைகளில் விற்பனை செய்ய மத்திய சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சகம் தடை விதித்து உள்ளது.