காந்தி மார்க்கெட் சுத்தம் செய்யும் பணி இன்று முடியும். நாளை முதல் செயல்படும்.
காந்தி மார்க்கெட் சுத்தம் செய்யும் பணி இன்று முடியும். நாளை முதல் செயல்படும்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2வது நாளாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
திருச்சி காந்தி மார்க்கெட் 8 மாதங்களுக்கு பின்பு நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜனால் திறந்து வைக்கப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டு தடை நீங்கியதையடுத்து, கொரோனாவால் மூடப்பட்ட
மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்தும், சன்சைடு உள்ளிட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னரே வியாபாரம் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.’
இன்று முதல் காந்தி மார்க்கெட்டில் மீண்டும் வியாபாரம் தொடங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டப்படி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்க முடியவில்லை.
2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்.
நேற்று முதல் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள கடைகளின் முன்புள்ள கூரை ஷெட், சன்சைடு, சிமெண்டு சிலாப்பு ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை பொக்லென் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது..
இந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் இரவு, பகலாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அரியமங்கலம் கோட்டை உதவி ஆணையர் கமலக்கண்ணன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் நரசிங்கமூர்த்தி, உதவி பொறியாளர் லோகநாதன் முன்னிலையில் ஷிப்டுக்கு 100 துப்புரவு பணியாளர்கள் வீதம் தொடர்ந்து இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு ஷிப்டு என்றும், பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை மற்றொரு ஷிப்டு என தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
காந்தி மார்க்கெட்டின் உள்ளே உள்ள கடைகள் முன்பு வியாயாரிகள் மழைநீர் வடிந்து செல்லக்கூடிய வடிகால்களை ஆக்கிரமித்து அதன் மேலே பெஞ்ச் உள்ளிட்டவைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்திருந்தது தெரியவந்தது.
இதனால், மார்க்கெட்டில் பல இடங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் மாயமாகி இருந்தது. அவற்றை இன்று மாநகராட்சி பணியாளர்கள் தோண்டி எடுத்து வடிகாலில் நிரம்பி இருந்த சாக்கடை ,சேறு ஆகியவற்றை அகற்றி புனரமைத்தனர்.
சில இடங்களில், கட்டிட பணியாளர்களை கொண்டு புதியாக செங்கல் வைத்து கட்டி வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டன.
காந்தி மார்க்கெட்டில் 2 நாட்களில் ஆக்கிரமிப்புகள், சாக்கடை கழிவுகள் என 100 டன் குப்பைகள் லாரி லாரியாக அகற்றி கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், காந்தி மார்க்கெட்டில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள், புதையுண்ட வடிகாலை கண்டுபிடித்து அதில் உள்ள சேறு, சகதிகளை 40 லாரிகள் மூலம் 100 டன் குப்பைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. என்றார்.
இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை ஆய்வு செய்திட நீதிமன்ற குழுவினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், காந்தி மார்க்கெட்டில் தூய்மைப்பணி மற்றும் வடிகால் வசதிகள், கடைகளின் முன்பு உள்ள கூரைகள், சன்சைடுகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா
என மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குபின் ஆட்சி தலைவர் கூறுகையில்,
காந்தி மார்க்கெட்டில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்பணி மேற்கொண்ட பின்னர் மீண்டும் வியாபாரம் தொடங்கும். மேலும் நீதிமன்ற கமிட்டியும் பார்வையிட்டு முடிவெடுக்க உள்ளது.
காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே, காந்தி மார்க்கெட் மீண்டும் காய்கறி விற்பனையை தொடங்குவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு அல்லது (திங்கட்கிழமை) முதல் இருக்கலாம் என்றும், இது தொடர்பாக வியாபாரிகள் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.