நவ-30 ம் தேதி மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை.
நவ-30 ம் தேதி மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை.
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் 30 -ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள், ரஜினிகாந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அண்மையில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியான அறிக்கைக்கு, அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான் என விளக்கமளித்திருந்தார். அதேபோல், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்ட்டர்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.