டேய் லூசு, காங். தலைவர்களும் ஊமை என நிருபிக்க வேண்டாம். குஷ்பு பளார்
டேய் லூசு, காங். தலைவர்களும் ஊமை என நிருபிக்க வேண்டாம். குஷ்பு பளார்
டேய் லூசுத் தம்பி..” என்று கூப்பிட்டு காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு பளார் என முகத்தில் அறைந்தார் போல் பதில் சொல்லி உள்ளார் பாஜகவின் குஷ்பு.
குஷ்புவை பொறுத்தவரை ரொம்பவும் தைரியசாலி.. யாராக இருந்தாலும் நேருக்குநேர் பேசிவிடுவார்.. அதேபோல, ட்விட்டர்வாசிகள் எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு பொறுமையாக பதிலளிப்பார்.. தன்னை யாராவது கிண்டல் செய்தாலோ, அவமதித்தாலோ, நக்கல் அடித்தாலோ, அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே சென்று பதிலளிப்பது குஷ்புவின் பாலிசி.
இதுபோல பலமுறை நடந்துள்ளது.. எத்தனையோ பேர் குஷ்புவின் மதம், குஷ்புவின் கட்சி தாவல், குஷ்புவின் பேட்டி உட்பட அனைத்தையுமே சர்ச்சையாக்கி கேள்விகளை எழுப்பினாலும் சரி, அல்லது எல்லை மீறி ஆபாச வார்த்தைகளை உதிர்த்தாலும் சரி, அதை பார்த்து பயந்து, பின்வாங்க மாட்டார்..
மாறாக, அந்த நபரை உரிய பதிலடியால் கிழிகிழியென கிழித்துவிடுவார்.
அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் மீதான அதிருப்தியில் பாஜகவில் சேர்ந்துள்ளார்.. இதனால் காங்கிரஸ் தரப்பில் சிலர் குஷ்புமீது கோபமாகவும், காழ்ப்புணர்ச்சியாலும் உள்ளனர்
அதில் ஒரு காங்கிரஸ் தொண்டர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
அதில், “காங்கிரசில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காசு கேட்ட மாதிரி, பிஜேபியிலும் வேல் யாத்திரைக்கு காசு கேட்டிங்களாமே உண்மையா?”, முருகனும் மத்த சீனியர்களும் உங்க மேல செம்ம காண்டுல இருக்காங்களாமே. அடுத்த கட்சிக்கு போக பெட்டியை ரெடி பண்ணிட்டிங்களா?” என்று வரம்பு மீறி பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, “டேய் லூசுத் தம்பி… ராகுல்காந்தியிடம் போய் கேள்.
6 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடக்கிறது. அவர் எனக்கு பணம் கொடுத்தார் அல்லது.
எல்லோரும் உங்களைப் போன்றவர்களுக்கு கொடுத்தார் என்று நீங்கள் நினைத்தால், பணம் வாங்க முடியுமா ?
காங்கிரஸ் தலைவர்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.