பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை.
பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு முறையும் நீடிக்கும் போது மத்திய அரசின் அறிவிப்பு, மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் மாவட்ட நிலைமை குறித்து ஆலோசிக்கப்படும்.
பொது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு இவற்றை கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
தற்போது பெருமளவு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இந்நிலையில், பத்தாம் கட்ட ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
பதினோராம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.