நிவர் புயல், திருச்சி மாநகரில் மழை பெய்ய தொடங்கியது.
நிவர் புயல், திருச்சி மாநகரில் மழை பெய்ய தொடங்கியது.
நிவர் புயல் காரணமாக
தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இன்று இரவு காரைக்கால் பகுதியில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக திருச்சியில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.
முக்கிய பகுதிகளான சுப்ரமணியபுரம், மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் . பாலக்கரை ஆகிய பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்றது.