ஊழியரை அமரவைத்து முதல்வர் நின்று பேசிய காட்சி, பொதுமக்கள் பாராட்டு.
ஊழியரை அமரவைத்து முதல்வர் நின்று பேசிய காட்சி, பொதுமக்கள் பாராட்டு.
ஆட்சி அதிகாரம் என்றால் இவருக்கு என்ன தெரியும்? என நக்கலாக சிரித்தவர்கள் மத்தியில் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் முதல்வர் எடப்பாடியார். அதிகாரமான பேச்சு கிடையாது, அதட்டலான வார்த்தைகள் வராது, ஆனால் ஆட்சி சக்கரம் அச்சு பிசகாமல் சூழ எது தேவை என்பதை நன்கு அறிந்த சூத்திரதாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்டதிலிருந்து தற்போது நிவர் புயலில் இருந்து மக்களை காக்க பாடுபடுவது வரை அதிமுக அரசும், அமைச்சர்களும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின் படி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட அருமை பெருமைகளுக்கு எல்லாம் உரித்தான முதலமைச்சர் எடப்பாடியார் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது புயல் கண்காணிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் புடைசூழ எடப்பாடியார் அந்த கண்காணிப்பு அறைக்குள் நுழைகிறார். முதலமைச்சர் அய்யா வந்துவிட்டாரே… என பதறியடித்துக் கொண்டு அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் அவசர அவசரமாக எழுந்து நிற்க. அவரை தடுத்து நிறுத்தும் எடப்பாடியார் “அட உட்காருப்பா… என்ன பண்றீங்க… வேல எல்லாம் எப்படி போய்ட்டு இருங்குன்னு மட்டும் சொல்லுங்க போதும்… இதுக்கு ஏன் போய் எந்திரிச்சு நின்னுக்கிட்டு…” என அமர வைக்கிறார். அதன் பின்னர் முதலமைச்சர் நின்று கொண்டே, அந்த அதிகாரியிடம் தரவுகளை கேட்டறிகிறார். இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அனைவரும் மாநிலத்தின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர் ஒரு சாதாரண ஊழியரை அமர வைத்துவிட்டு பேசுறார்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சில் வண்டுகள் போடும் ஆட்டம் இருக்கே என வாய்பிளக்கின்றனர்.
ஆம், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக எதில் சாக்கு கிடைக்கும் அதிமுக அரசை விமர்சிக்கலாம் என கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்ய பார்த்தாலும் கிடைப்பது என்னவோ பெரிய முட்டை தான். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
அரும்பாடு பட்டு கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள இந்த சமயத்தில் ஊரடங்கை மீறி பரப்புரை செய்யும் உதயநிதி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்னும் ஐந்து மாதம் தான், அதன் பிறகு எங்கள் ஆட்சி, அதிகாரி யார் யார் என்று பார்த்து வைத்துள்ளோம், ராஜேஷ் தாஸ் தானே, ஸ்பெஷல் டிஜிபி பார்த்துக் கொள்கிறோம்” என்று உதயநிதி பகிரங்க மிரட்டல் விடுத்தது ஒட்டு மொத்த போலீஸ் அதிகாரிகளையும் மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது உதய நிதி ஸ்டாலின் மீது பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் பார்க்கும் மக்கள்
அதிகார உச்சத்தில் முதலமைச்சராக இருக்கும் போது சாதாரண அதிகாரியை அமரச் சொல்லி தன்மையாக பேசும் எடப்பாடியார் எங்கே? 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் காவல்துறையின் உச்ச அதிகாரியின் பெயரையே சொல்லி மிரட்டும் சில் வண்டுகள் எங்கே?
என கூறுகின்றனர்.