Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்மா இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்கும் முறை, கலெக்டர் அறிவிப்பு.

அம்மா இருசக்கர வாகனம்: விண்ணப்பிக்கும் முறை, கலெக்டர் அறிவிப்பு.

0

தமிழக அரசு 50 சதவீத மான்ய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர் மாவட்டத்தில் வசிக்கும், பணிக்கு செல்லும் மகளிருக்கான ஆட்டோ கியர் அல்லது கியர் லெஸ் 125 சிசி இரு சக்கர வாகனம் வாங்க, மானியத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்காணும் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

1. வயது 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.

2. விண்ணப்பிக்கும் நாளில் தகுதியான பழகுநர் உரிமம் இருந்தால் போதும்.
மானியம் பெறுவதற்குள் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.

3. விண்ணப்பிக்கும் நபரின்ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பயனாளி, அமைப்புசாரா மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிபவராக, சிறுதொழில், சுயதொழில் செய்பவராக இருத்தல் வேண்டும்.

5. தொலைதூரம், மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள், பெண்களைக் குடும்பத்தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதைக் கடந்த திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள், ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்

6. மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்கும் மாற்றுத் திறனாளி பெண் பயனாளிகளுக்கு மான்யம் 31,250 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சிஅலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

தகுதியான பணிக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.