திருச்சியில் பார்க்கிங் இல்லா கட்டிடங்கள், உடனடி நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. கிஷோர்குமார் கோரிக்கை.
திருச்சியில் பார்க்கிங் இல்லா கட்டிடங்கள், உடனடி நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. கிஷோர்குமார் கோரிக்கை.
“ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கருத்து எதிரொளி_மாநகராட்சி ரெஸ்பான்ஸ்”
திருச்சி மாநகர பகுதிகளில் பல கோடிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொலை நோக்கு பார்வை இல்லை….? என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுட்டிகாட்டியிருந்தோம்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்ட முடிவடைந்தாலும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், அதற்கான காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை தொடர்ந்து பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தற்பொழுதைய பெரியகடை வீதி, NSB சாலையை போல் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சுட்டிகாட்டியிருந்தோம்.
இதிலுள்ள உண்மையை தற்பொழுது ஆய்வு செய்த திருச்சி மாநகராட்சி போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சியிலுள்ள பிரதான சாலைகளில் குறிப்பிட்ட இடத்தில் பார்கிங் வசதி ஏற்படுத்துவதுடன் காவலாளிகளை நியமித்து குறிப்பிட்ட நேர அவகாசத்திற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வகுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
திருச்சி மாநகராட்சி மாநகரில் போக்குவரத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கை வரவேற்க ஒன்று. ஆனால் கட்டண சிஷ்டம் என்பது இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டு எதிர்ப்பு எழுந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே திருச்சி மாநகர பகுதிகளில் பார்கிங் வசதி இல்லாத கட்டிடங்கள் மற்றும் கட்டிடத்தின் பார்கிங்கை வணிக நோக்கத்திற்காக கடைகளாக மாற்றம் செய்தவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்தாலே சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது வெகுவாக குறையும்.
செயல்படுத்தபடுமா…..?
S.R.கிஷோர்குமார்,
வழக்கறிஞர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி.