சீரற்ற வானிலை. அனைத்து மீன்பிடி படகுகளும் துறைமுகம் திரும்ப அறிவுறுத்தல்.
சீரற்ற வானிலை. அனைத்து மீன்பிடி படகுகளும் துறைமுகம் திரும்ப அறிவுறுத்தல்.
சீரற்ற வானிலை மற்றும் 25/11/2020 அன்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளை சூறாவளி கடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் உடனடியாக மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதனுடன் இணைந்த தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த பகுதியாக உருவாகியுள்ளது. அது மேலும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் வங்காள விரிகுடாவின் பூமத்திய ரேகை அருகிலுள்ள மத்திய பகுதிகளில் குறைந்த அழுத்தப் பகுதியாக நீடிக்கிறது. அது தென்மேற்கு வங்காள விரிகுடாவிலிருந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தீவிரமடைய வாய்ப்புள்ளது. அக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடற்கரையை நோக்கிச் நகர்ந்து சென்று வருகின்ற 2020 நவம்பர் 25 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் செல்லும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.