குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது செங்கல்பட்டு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது
குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது செங்கல்பட்டு அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது
நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளாகியது.
பாஜக சார்பில் கடலூரில் நடத்தப்படும் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார், கார் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குஷ்பு காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், குஷ்பு லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்ததால் மாற்று கார் ஏற்பாடு செய்து கடலூர் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லாரி தனது கார் மீது மோதிவிட்டதாகவும் கடவுள் முருகன் தன்னை காப்பாற்றி விட்டதால் வேல் யாத்திரையில் பங்கேற்க கடலூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முருகன் மீது தனது கணவன் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.