வெல்லமண்டி நடராஜன், காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடன் முதல்வரை சந்தித்தார்
வெல்லமண்டி நடராஜன், காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடன் முதல்வரை சந்தித்தார்
ஐகோர்ட்டு தடை நீடிப்பால் அச்சம்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும்
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எடப்பாடி பழனிசாமிவுடன் சந்திப்பு.
*தொடர் தடை*
திருச்சி காந்தி மார்க்கெட், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 27ந் தேதி முதல் மூடப்பட்டது. அங்குள்ள மொத்த வியாபாரிகள், இரவு மட்டும் வியாபாரம் செய்யும் வகையில் பொன்மலையில் ரெயில்வேக்கு சொந்தமான ஜி.கார்னர் திடல் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை திறக்க தடைவிதிக்க வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு தொடர்ந்து, காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கு தடையை நீடித்து வருகிறது. இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை திறக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. இதனால், வியாபாரிகள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
*கலெக்டருடன் சந்திப்பு*
இதற்கிடையே காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கு வருகிற 26 ந் தேதி மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. எனவே, அன்றைய தினம் காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கான உரிய அழுத்தத்தை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு கொடுக்க வேண்டும் என அவரை வியாபாரிகள் சந்தித்து முறையிட்டனர். காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் கமலக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் முறையிட்டனர்.
அதற்கு கலெக்டர், வியாபாரிகளுக்கு சாதகமான முடிவு வரும் என்று தெரிவித்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
*அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முதல்வருடன் இன்று சந்திப்பு*
திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதைச் சார்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கும், காந்தி மார்க்கெட்டுக்கும் எவ்வித தெடர்பும் இல்லை என்பது கலெக்டர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும்.
கள்ளிக்குடி திறக்கப்பட்டு ஏற்கனவே அங்கு 108 கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே, ஐகோர்ட்டில் உண்மை நிலவரத்தை மாவட்ட நிர்வாகமும், மாகராட்சி நிர்வாகமும் தெரிவித்து அழுத்தம் தரவேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர் மூலம் அதை தெரிவிக்க வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூறினோம், முதல்வரும் விரைவில் இதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார் தமிழக முதல்வரை சந்தித்த பின்பு
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறினர்.