மக்கள் அரசன் பிக்சர்ஸின் EPS பட ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதி வெளியிட்டார்.
மக்கள் அரசன் பிக்சர்ஸின் EPS பட ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதி வெளியிட்டார்.
எங்கள் பாட்டன் சொத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: எங்கள் பாட்டன் சொத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: மக்கள் அரசன் பிக்சர்ஸ் எஸ்.அழகர்சாமி தயாரிப்பில் வெளியாக உள்ள எங்கள் பாட்டன் சொத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இரண்டு நாட்களாக கோலிவுட்டின் இ.பி.எஸ் யார் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் எங்க பாட்டன் சொத்து என்ற திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் எஸ்.அழகர்சாமி தயாரிப்பில் எங்கள் பாட்டன் சொத்து, மேதாவி, குலசாமி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர உள்ளது. இதில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த எங்கள் பாட்டன் சொத்து திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் பழங்காலத்து உடையில் கையில் கோலுடன் கம்பீரமாக நடிகர் விமல் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. மக்கள் சேவகர் எஸ்.ஆர்.கே இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் ரீபைசா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பா.விஜய் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் ஜீவா நடிக்கும் மேதாவி திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்கள் அரசன் பிக்சர்ஸ் – ன் தயாரிப்பில் குலசாமி திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.