திருச்சி உயர்மட்ட மேம்பாலம்: நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை
திருச்சி உயர்மட்ட மேம்பாலம்: நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை
திருச்சி தொட்டியம் உன்னியூர் கிராமத்தில் இருந்து, கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்திற்கு காவிரியின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டால் திருச்சி மாவட்டம் உன்னியூர், சுமார் 30 கிராமங்கள் அமைந்துள்ள கரூரில் கரூர் மாவட்டம் நெரூர் உடன் இணைக்கப்படும். இப்போதைக்கு பொதுமக்கள் மாயனுார் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் கட்டப்பட்டால் சுமார் 20 கிமீ அளவு பயண துாரம் குறைக்கப்படும்.
இந்த பாலம் கட்டுவதற்கான தொடக்க கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்காக, நில உரிமையாளர்களிடம் நேரடி பேச்சுவார்த்தை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி சப்-கலெக்டர் ஜோதி சர்மா, தொட்டியம் தாசில்தார் மலர் உள்ளிட்ட பல மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.