Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 13.11.2020

இன்றைய ராசிப்பலன் - 13.11.2020

0

இன்றைய ராசிப்பலன் – 13.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும்

வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உறவினர் வழியில் சுபச் செய்தி இருக்கும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒற்றுமை கூடும். லாபம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எட்டில் ஒற்றுமை நிலவ உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.உத்யோகத்தில் புதிய கருவிகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தொழிலில் வேலைப்பளு இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி இருக்கும். மருத்துவ செலவுகள் உண்டாகும். உடல்நிலையில் கவனம் தேவை.வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். புதிய மாற்றத்தால் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை அடையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் புது உற்சாகத்துடன் செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். தொழில் தேடுபவர்களுக்கு புதிய தொழில் கிடைக்கும்.பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத டென்ஷன் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது வேண்டும். உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தொழிலில் மந்தநிலை இருக்கும். தொழிலில் உள்ள பிரச்சினைகள் தீரும். உற்றார் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலும்.கைக்கு வராமல் இருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய பொருட்கள் வீடு வரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக காணப்படும். கடன் உதவி கிடைப்பதில் காலதாமதம் ஆகும். குழந்தைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சில் நிதானம் வேண்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வீட்டுக்கு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையே இருக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுப காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். எண்ணிய காரியம் நிறைவேறும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடித்துக் காட்டுவீர்கள். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு அகலும். தொழிலில் புதிய மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி தொகை கிடைக்க தாமதமாகும்.பகல் 12.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லதே கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு சுறுசுறுப்பு இல்லாமலும் இருப்பீர்கள். தொழில் தேவையில்லாத டென்ஷன் இருக்கும்.பகல் 12.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் பேச்சுக்கு தேவையில்லாமல் தலையிட வேண்டாம். எந்த விஷயத்திலும் நிதானமாக இருந்து செயல்படுங்கள் அதுவே நல்லது.

Leave A Reply

Your email address will not be published.