Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இயற்கை பூச்சிகள் பாதிக்காத வகையில் மருந்து தெளிக்க வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்.

திருச்சியில் இயற்கை பூச்சிகள் பாதிக்காத வகையில் மருந்து தெளிக்க வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்.

0

திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரீப் மற்றும் ராபி பாருவ காலத்தில் மக்காசோளம் 19057 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்காசோளாம் பயிரானது புள்ளப்பாடி, மண்ணச்சநல்லூர், தொட்டியம்,முசிறி, உப்பிலியபுரம், த. பேட்டை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய வட்டாரங்களில் மானாவரியாக பயிர் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் மக்காச்சோள பயிரில் அசுவினி பூச்சி தாக்குதல் தென்படுகிறது. முக்கியமாக புள்ளம்பாடி வட்டாரத்தில் தாப்பாய், மால்வாய், சிறுகளப்பூர் ஆகிய கிராமங்களில் காணப்படுகிறது.

இதனடிப்படையின் வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலைய வேளான் விஞ்ஞானி பூச்சியியல் உதவி பேராசிரியர் மதியழகன் திருச்சி மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கும் சந்திரமோகன் ஆகியோர் வயயாய்வு மற்றும் பூச்சி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டார்.

அப்போது, அசுவினி பூச்சிகளின் எண்ணிக்கைக்கேற்ப இயற்கை பூச்சி எதிரிகளான கண்ணாடி, இறக்கைபூச்சி, பொறிவண்டு, ஊசித்தட்டான், தட்டான் ஆகியவை அதிக அளவில் தென்பட்டது.

இலை அனைத்தும் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் ஆதலால், பூச்சி மருந்துகள் தெளிக்கும் பட்சத்தில் இவை அனைத்தும் பாதிக்கப்படும் மற்றும் இயற்கை உணவு சங்கிலி பாதிக்கப்பட்டு பயிரை தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று பூச்சியியல் வல்லுநர் மதியழகன் தெரிவித்தார்.

மேலும் தற்போது நிலவும் பருவ நிலை வெகுவிரையில் மாற்றம் ஏற்பட்டு மழை பொழிவு ஏற்படும் பட்சத்தில் அனைத்து அசுவினி பூச்சிகளும் அழிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அசுவினி பூச்சிகள் தாக்குதல் அதிகமான இருக்கும் பட்சத்தில் டை மெத்தியோட் என்ற மருந்தினை 2 ml ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாதுகாப்பக தெளித்திடவும் பரிந்துரை செய்தார்.

மேற்கண்ட தகவல்களை திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் ஆறு. பெரியகருப்பன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.