Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்.

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்.

0

*திருச்சி மாவட்ட தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை ; அலறும் சட்டவிரோத குற்றவாளிகள்*

திருச்சி மாவட்ட எஸ்பி., ஜெயச்சந்திரன் உத்தரவின்கீழ் தனிப்படை டிஎஸ்பி., பால்சுதர் மேற்பார்வையில் எஸ்ஐ., நாகராஜன் (திருவெறும்பூர்) தலைமையில் போலீசார் சட்டவிரோத குற்றச்செயல்களை ஒடுக்குவதில் தீவிர நடவடிக்கையைக் கடந்த 2 மாதங்களாக கடுமையாக மேற்கொண்டுள்ளனர். இதில், ராம்ஜிநகரில் டூவீலரில் வைத்து பயணத்தில் கஞ்சா விற்ற திருவெறும்பூர் அருகே காட்டூரைச் சேர்ந்த முத்துமணி, கமால் ஆகிய 2 பேர்களைப் போலீசார் கைது செய்தனர். இதில் கமால் மீது திருச்சியில் க்ரைம் வழக்குகள் ஏற்கனவே உள்ளன.




இதேபோல், மணப்பாறையில் பல வருடங்களாக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில திருட்டு லாட்டரிகளின் மொத்த வியாபாரிகளைக் கூண்டோடு கைது செய்தனர்.

தொடர்ந்து சமயபுரத்தில் பூக்கடையினுள்ளே அரசால் தடைசெய்த திருட்டு லாட்டரிகளை விற்ற 2 பேர்களையும் கைது செய்தனர்.

மேலும், திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் எல்லைக்குட்பட்ட சுனைப்புங்கநல்லூரில் தமிழக அரசின் அனுமதியின்றி காவிரி ஆற்றின் பெருவள வாய்க்காலில் ஒரு கும்பல் மணலைக் கொள்ளையடித்து வருவதாக திருச்சி மாவட்ட எஸ்பி., ஜெயச்சந்திரன் உத்தரவின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தனிப்படை போலீஸ் டிஎஸ்பி., பால்சுதர் மேற்பார்வையில் எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிரடியாக ரெய்டில் 11 பேர் கொண்ட மணல் கொள்ளைக் கும்பல் மணலை மூட்டைகளில் கொள்ளையடித்து டாடா ஏசி., வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் தலைத்தெறிக்க ஓடிய கும்பலில் இருந்து 2 பேர்களை ஒரு செல்போன் , ரூ. 10 000 ஆயிரத்துடன், டாடா ஏசி., வாகனம், சிவன் கோயில் தெற்கு பகுதியில் பதுக்கிய மணல் மூட்டைகள் உள்ளிட்ட 30 மணல் மூட்டைகளுடன் போலீசார் கைது செய்தனர்.

 :-

தனுஷ் (25)
த/பெ. முருகானந்தம்
சுனைப்புங்கநல்லூர்
மணச்சநல்லூர் தாலுகா

விஜய் (25)
த/பெ. முருகானந்தம்
சுனைப்புங்கநல்லூர்.

*இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேடப்பட்டு வரும் மற்ற மணல் கொள்ளைக்குத் துணைப் போன சுனைப்புங்கநல்லூரைச் சேர்ந்தவர்களாவன*

வாகன உரிமையாளர்
இளங்கோவன் ,
த/பெ. மொட்டைய்யன்

டிரைவர் மகேந்திரன் ,
த/பெ. குமார்,

*மணல் மூட்டைகளை ஏற்றியவர்கள்*

சிவக்குமார்
த/பெ. மனோகர்

வெங்கடேஷ்
த/பெ. செல்வராஜ்

ஞானம்
த/பெ. சங்கர்

கல்யாணசுந்தரம்
த/பெ. சின்னக்குழந்தை

ராம்
த/பெ. கிருஷ்ணமூர்த்தி

பிரகாஷ்
த/பெ. செல்வராஜ்

*உள்ளிட்ட 9 பேர்களையும் எஸ்ஐ., நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்*

இதே போல சமயபுரம் போலீஸ் எல்லையில் நம்பர் பிளேட்டே இல்லாத டிவிஎஸ்., 50 யில் திருட்டு மணல் மூட்டைகள் பறிமுதல் . இதனைக் கடத்தியவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

*தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளால் திருட்டு லாட்டரி, திருட்டு மணல் கொள்ளையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடையே பீதி ஏற்பட்டுள்ளது*

இந்நிலையில், நேற்று துறையூர், புலிவலம் , பகளவாடி ஆகிய பகுதிகளில் அரசின் அனுமதியின்றி திருட்டுத்தனமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களைப் பதுக்கி விற்ற ஓமாந்தூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமாரைப் (39) பெரமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து
180 பாட்டில்கள், ஒரு கீபேட் போன் , 1820 பணம், டூவீலர் உடன் கைது செய்து தனிப்படை போலீசார் புலிவலம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

மேலும், சரவணன், வடிவேல் உள்ளிட்ட 3 பேர்களைப் போலீசார் தேடி வருகிறார்கள். *தனிப்படை போலீசாரின் அதிரடி தொடர் வேட்டையால் சட்டவிரோத செயல்களிடையேயும், இதுநாள்வரை மாமுல் பெற்று வந்த சிலரிடையேயும் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம். தொடர்ந்து களத்தில் தீவிரமாக இறங்கி குற்றவாளிகளை அள்ளிவரும் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி., ஜெயச்சந்திரன் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.