*சுசீந்திரம் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி கோரி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்று வருகிறது.. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா அடுத்த மாதம் 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29 ம் தேதி தேரோட்டமும் 30 ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடத்த முடிவு செய்து கோவில் நிர்வாகம் பஞ்சாங்க முறைப்படி தேதியும் குறிப்பிட்டுள்ளனர் . ஆனால் கடந்த 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்மிக நிகழ்ச்சிகள் அனைத்தும் சில கட்டுப்பாடுகளுடன் நிபந்தனைக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது . இந்தநிலையில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்த சுசீந்திரம் மார்கழி திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டுமென இந்து இயக்கம் சார்பில் கோவில் முன்பு கையெழுத்து இயக்கம் நடைப்பெற்று வருகிறது. மார்கழி திருவிழாவை தகுந்த பாதுகாப்புடன் நடத்த அனுமதிக்க வேண்டுமென இந்து இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..*