திருச்சியில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தர்ணா போராட்டம்
திருச்சியில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தர்ணா போராட்டம்
மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து
மின்வாரிய அனைத்து தொழிற்சங்க
கூட்டு நடவடிக்கைக்குழு தர்ணா போராட்டம்
மின் வாரிய தலைவைரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், மின்
வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை பறிக்க
கூடாது. துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து பராமிப்பை
தனியாரிடம் விடக்கூடாது. அரசாணை என் 304ஐ மின்வாரியத்தில் அமலாக்க
வேண்டும். 4200 காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
பொறியாளர், தொழிலாளர், பகுதிநேர ஊழியர், ஒப்பந்த ஊழியர்
அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தியும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு
நடவடிக்கைக்குழு சார்பில் புதனன்று மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை
பொறியாளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தொமுச மாநில துணைத்தலைவர் மலையாண்டி தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். போராட்டத்தை
விளக்கி பொறியாளர் கழக சந்தானகிருஷ்ணன், இன்ஜினியர் சங்க
சங்கர்கணேசன், பொறியாளர் ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், எம்ப்ளாயீஸ்
பெடரே~ன் சிவசெல்வம், டிஎன்பிஇஓ இருதயராஜ், சிஐடியு செல்வராஜ், தொமுச
தியாகராஜன், ஐஎன்டியுசி கருணாநிதி, தொழிலாளர் சம்மேளன பெருமாள்
ஆகியோர் பேசினர்.
போராட்டத்தை வாழ்த்தி மத்திய தொழிற்சங்க தலைவர்கள், அரசு ஊழியர்கள்,
எல்ஐசி, வங்கி சங்க தலைவர்கள் பேசினர். தர்ணா முடிவில் பொறியாளர் கழக
துணைத்தலைவர் விக்ரமன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் அனைத்து சங்க
நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா