திருச்சி காந்தி சந்தையில் திருட்டு, வியாபாரிகள் நாடகமா ?
திருச்சி காந்தி சந்தையில் திருட்டு, வியாபாரிகள் நாடகமா ?
திருச்சி காந்தி சந்தையில் 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு – மீண்டும் காந்தி சந்தையை திறக்க வியாபாரிகள் திருட்டு நாடகமா ? காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் காந்தி சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்படு பொன்மலை. ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அங்குள்ள மளிகைகடை, கூடை கடை, மிட்டாய் கடை உள்ளிட்ட 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் களவு போயிருந்தது.
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர்கள் காந்தி சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டு உடைக்கப்பட்ட இந்த ஏழு கடைகளில் உள்ள அரிசி மூட்டைகள், சமையல் எண்ணை பாக்கெட்டுகள், ரூ. 20,000 ரொக்கம் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் களவு போயியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக, பூட்டப்பட்டுள்ள இந்த காந்தி சந்தையில் ஏற்கனவே நான்கு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாவது முறையாக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்தி சந்தையை திருச்சி மணிகண்டம் அருகே, கள்ளிக்குடி பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,
இந்த காந்தி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தீ விபத்து, பாதுகாப்பின்மை, திருட்டு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, இந்த காந்தி சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் நாடகமாடுகிறார்களா? என்பது குறித்தும்,
ஏற்கனவே நடந்த தீ விபத்து சம்பவம் மற்றும் திருட்டு சம்பவங்களில் வியாபாரிகளே ஈடுபட்டு நாடகமாடுகிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
எப்படியாவது மீண்டும் காந்தி சந்தையை திறந்து விட வேண்டும் என்ற நோக்கில் வியாபாரிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.