மணப்பாறையில் லாட்டரி விற்ற கும்பல் கைது. திருச்சி மாநகரில் எப்போது ?
மணப்பாறையில் லாட்டரி விற்ற கும்பல் கைது. திருச்சி மாநகரில் எப்போது ?
மணப்பாறையில் லாட்டரி கும்பல் கூண்டோடு சிக்கியது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரியை மணப்பாறையில் சட்ட விரோதமாக அச்சடித்து விற்பனை செய்த கும்பலை எஸ்.பி.யின் தனிப்படை டிஎஸ்பி பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட போலீஸார் இன்று கைது செய்தனர்.
13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 7 பேர் சிக்கியதுடன், லாட்டரி சீட்டு அச்சடிக்க பயன்படுத்திய கணினிகள், பிரிண்டர், செல்போன்கள், இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ. 8 ஆயிரத்து 120 பணம் பறிமுதல்.
லாட்டரிகளுக்காக பயன்படுத்தும் 10 செல்போன்கள்,
2 டூவீலர்கள், கம்ப்யூட்டர் பிரிண்டர்களுடன்.
கைதான 5 பேர்களும் மொத்த லாட்டரி வியாபாரிகள் ஆகும்.
ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் அளவில் தயாரிக்கப்பட்ட லாட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை டிஎஸ்பி பால்சுதர் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார்
10 நாட்களாக தீவிரமாக கண்காணித்து இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
லாட்டரிகளின் விலை ரூ. 30 முதல் ரூ. 500 வரையாம்
2 .11. 2020 முதல் 08.11.2020 தேதிகள் வரை விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட லாட்டரிகள்.
இவர்கள் தான் மணப்பாறையிலேயே மொத்த வியாபாரிகளாம்.
திருச்சியிலும் பல்வேறு பகுதிகளில் லாட்டரி வியாபாரம் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.