Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சபரிமலை மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்.

சபரிமலை மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்.

0

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் துவங்குகிறது.

சபரிமலை செல்பவர்கள், நவ.,14 வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோவில் நடை வரும் நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 41 நாடகள் மண்டலபூஜை நிறைவுக்குப் பிறகு டிசம்பர் 27 ல் கோவில் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.