அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்! அதிர்ச்சியில் தொண்டர்கள்
அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்! அதிர்ச்சியில் தொண்டர்கள்
அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
தேதியன்று நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், உயர் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து சென்றார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.