திருச்சியில் ஸ்டாலினுக்கு பார்வர்டு பிளாக் பசும்பொன் மாநில செயலாளர் எச்சரிக்கை. தேவரை அவமதித்த ஸ்டாலினுக்கு 1% வாக்கு கூட ஆதரவு கிடையாது.
திருச்சியில் ஸ்டாலினுக்கு பார்வர்டு பிளாக் பசும்பொன் மாநில செயலாளர் எச்சரிக்கை. தேவரை அவமதித்த ஸ்டாலினுக்கு 1% வாக்கு கூட ஆதரவு கிடையாது.
113வது தேவர் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அதில் முக்கியமாக ராமநாதபுரத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஏராளமான முக்கிய அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் உள்ள பூசாரியிடம் வாங்கிய விபூதியை நெற்றியில் பூசாமல், விபூதியை குப்பையைப்போல் கீழே கொட்டி முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதை செய்த ஸ்டாலின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
இச்செயலுக்கு மு. க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியிலும் நுழைந்து வாக்கு சேகரிக்க விடமாட்டோம் என்றும் தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
மேலும் தேவர்களின் வாக்கு 1% கூட திமுகவிற்கு கிடைக்க விடமாட்டோம் என்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் மாநில செயலாளர் காசிமாயத் தேவர் எச்சரித்துள்ளார்.