விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து
திருச்சி நம்பர் ஓன் டோல்கேட்டில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை ஏற்பாட்டின் பேரில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறவழி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா, மாநில ஒருங்கிணைப்பாளர் அரவானூர் விச்சு, சுப.சோமு, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.