அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்த டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்த டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம்.
தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர்கள் நல சங்க தொடக்க விழா திருச்சியில் மாநிலத் தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு சங்க கல்வெட்டை திறந்து வைத்து, உறுப்பினர்கருக்கு அடையாள அட்டையை வழங்கி பேசும்போது, உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அன்பழகன், அரியகுமார், ஆறுமுகம், சாமிநாதன், செல்வராஜ், சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.