Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாட்ஸ்அப் இனி எப்போதும் மியூட். புதிய அப்டேட்

வாட்ஸ்அப் இனி எப்போதும் மியூட். புதிய அப்டேட்

0

வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.! இனி எப்போதும் மியூட்.!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்போது chat-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.

பயனர்கள் ஒரு தனிநபர் அதாவது பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு chat-ஐ எட்டு மணி நேரம் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் மியூட் செய்யலாம் என்று இருந்தது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கான வாட்ஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இனி எப்போதும் (Always) மியூட் செய்துகொள்வதற்கான வசதியை பயனர்களுக்கு வாட்ஸ் அப் அளித்துள்ளது.

விருப்பத்தை இந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் chat-ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் (Always) என்ற விருப்பத்தை கொடுத்துள்ளது.
இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு ஒருவேளை இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்-ல் போட்டோ, gif ஃபைல், லிங்க்ஸ், வீடீயோஸ் கோப்புகள், ஆடியோ ஆகியவற்றை தேடி கண்டுபிடிக்கும் வகையில் Search option சேர்க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதற்காகச் சோதனை செய்து வருகிறது. பிரபலமான சாட்டிங் பயன்பாட்டிற்கான வெப் பதிப்பில் விரைவில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை WABetaInfo தற்பொழுது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.