Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தங்கம் கடத்தல் வழக்கு, கேரளா முதல்வரின் முதன்மை செயலாளர் கைது.

தங்கம் கடத்தல் வழக்கு, கேரளா முதல்வரின் முதன்மை செயலாளர் கைது.

0

தீவிரமாகும் தங்கம் கடத்தல் வழக்கு.. கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் கைது !

கேரளாவில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது தங்கக் கடத்தல் வழக்கு. இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தங்கம் கடத்தலில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் மீது புகார் எழுந்தது.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கும் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அதன்படி சிவசங்கரிடம் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் வழக்கில்,  முன்ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவசங்கரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவனந்தபுரம் ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கர் கைது செய்யப்பட்டிருப்பது, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.