திருச்சியில் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்..!
தமிழகத்தில் நாளை மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது .
இதனை முன்னிட்டு முன்னிட்டு நாளை அக்டோபர் 30ம் தேதி அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்றும் அன்றைய தினம் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட வேண்டும்.
மேலும் அன்றைய தினத்தில் அரசின் உத்தரவை மீறி மதுவிற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.