இந்தியா முழுவதும் முடங்கிய ட்விட்டர் சேவைகள்..
உலகளவில் உடனடி நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் முக்கிய சமூக வலைதளமாக ட்விட்டர் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மணி நேரம் நிகழும் அன்றாட நிகழ்வுகள் குறித்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும்.
இந்தநிலையில், தற்போது ட்விட்டர் வலைதளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3,000-க்கும் அதிகமானோர் இணையதள செயல்பாட்டின் வேகம்(website DownDetector) குறித்த தளத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துவருகின்றனர்.
DownDetector தரவின் அடிப்படையில், பயனர்கள் தங்கள் ஊட்டங்களை புதுப்பிக்க முடியவில்லை. தளத்தின் பயன்பாட்டு பதிப்புகள் மட்டுமல்ல, வலைத்தளத்தை பயன்படுத்த முடியாமல் அவதியுற்றனர். அவர்கள் பின்தொடரும் நபர்களின் சமீபத்திய செய்திகள், போக்குகள் மற்றும் ட்வீட்களையும் பார்க்க முடியவில்லை.
அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் மட்டுமல்ல, டெஸ்க்டாப் பயனர்களும் பெரும் சிக்கல்களை அனுபவித்தனர்.
இந்தியாவில் இரவு 7.40 மணி முதலே ட்விட்டர் செயல்பாடு முடங்கியது. அதன் பின்னர் இரவு 9.07 மணிக்கு சரியானது. ட்விட்டர் முடங்கியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, ட்விட்டர் நிர்வாகமும் இதுவரையில் விளக்கமளிக்கவில்லை. வழக்கமாக, இதுபோன்ற செயலிழப்புகள் நீண்ட காலம் நீடிக்காது. சேவையக சிக்கலை ட்விட்டர் தான் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலிழந்து காணப்பட்டது. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போயினர்.