Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் BG.நாயுடு ஸ்வீட்டின் முதல் எலைட் கிளை திறப்பு

திருச்சியில் BG.நாயுடு ஸ்வீட்டின் முதல் எலைட் கிளை திறப்பு

0

திருச்சியில் B.G நாயுடு ஸ்வீட்ஸின் முதல் “எலைட்” கிளை – கோலாகல துவக்கம்

வணிகத்திற்கு எப்போதுமே தனி சிறப்பு உண்டு. பண்டமாற்று முறையில் தொடங்கி இன்று பண பரிவர்த்தனைகள் வரை பல்வேறு பரிமாற்றங்களை பெற்று வளர்ச்சியடைந்த ஒன்று வணிகம். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் அது.

அப்போதைய சிராப்பள்ளியில் பாலக்கரை பகுதியில் கூரைக்கடை ஒன்றில் வயதான நைனா ஒருவர் பூந்தியை சின்ன கூடையில் போட்டு அன்றைய சிறுவர்களிடம் கொடுத்த காட்சியை இன்றைக்கு பெரியவர்களாக இருப்பவர்கள் பலரிடமும் சொல்லி மகிழ்வார்கள்.நான்கு தலைமுறைகளாக  இனிப்புலகின் பயணம்…

ஆம், திருச்சியில் 100 வருடம் மேல் பாரம்பரியமிக்க கடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது B.G நாயுடு ஸ்வீட்ஸ் தான். அன்று தொடங்கிய பயணம் சுமார் 112 ஆண்டுகளை கடந்து இன்று “எலைட்” என்னும் உயர்தர வடிவமைப்பில் வந்து நிற்கிறது. காலங்கள் மாறினாலும், அதன் சுவை 100 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் இருந்து வருவதாக பல வாடிக்கையாளர்கள் மனதார வாழ்த்தி செல்லும் காட்சியை நாம் பார்க்க முடிகிறது.

இனிப்புகளின் பெருமையை திருச்சியில் தொடங்கி புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை என பல மாவட்ட மக்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி தென்னூரில் தங்களுடைய 29வது கிளையை இனிதே தொடங்கி உள்ளனர் B.G நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனத்தார். முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிப்புகள் மற்றும் காரவகைகள் மாலை வேளைகளில் சாட் எனப்படும் பானிபூரி வகைகளையும் வழங்க தயாராக உள்ளனர். பண்டிகை காலங்கள் நெருங்கும் இந்த வேளையில் சமூக இடைவெளி கடைபிடித்து குடும்பத்தோடு B.G நாயுடு ஸ்வீட்சுடன் சேர்ந்து கொண்டாடுவோம்.

Leave A Reply

Your email address will not be published.