ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம்
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம்
ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!
தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தால் கன்யகா பரமேஸ்வரி தேவி சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத் அருகே கட்பவாலில் வசவி கன்யகா பரமேஸ்வரி கோவிலில் உள்ளா துர்கா சிலைக்கு பணத்தால் அலங்காரிப்பட்டுள்ளது. அந்த பணத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாயாகும். ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட ஓரிகமி பூக்களால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வண்ணங்களின் அழகாக மடித்து உருவாக்கப்பட்ட சிலை காண்பவர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
இந்த துர்கா சிலைக்கு இதற்கு முந்தைய காலங்களில் இதைவிட அதிகமான தொகையால் அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அலங்காரம் செய்வதற்க்காக பக்தர்களிடம் பணம் பெறப்பட்டதாகவும், அலங்காரம் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் உரியவர்களிடம் பணம் திருப்பி தரப்படும் என்றும் கோவில் பொருளாளர் ராமு என்பவர் தெரிவித்துள்ளார்.