இந்துக்கள் மீது அவதூறு பரப்பும் திருமாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் : அர்ஜுன் சம்பத்
இந்துக்கள் மீது அவதூறு பரப்பும் திருமாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் : அர்ஜுன் சம்பத்
அவர்கள் சமஸ்கிருதத்தில் அறிஞர்கள் கிடையாது” அர்ஜூன் சம்பத் விளக்கம் !
சனாதன – வருணாசிரம – மனுஸ்மிருதிகளை பார்த்து ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் அறிஞர்கள் கிடையாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆன்மீக அரசியல் ஆலோசனைக் கூட்டம், அந்த கட்சியின் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அரசியல் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன – வருணாசிரம – மனுஸ்மிருதிகளை சிலர் உள்நோக்கத்துடன் எழுதி வைத்துள்ளனர். இதை பார்த்து ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சமஸ்கிருதத்தில் அறிஞர்கள் கிடையாது. நீதி நெறிமுறைகள் உடன் வலுவாக ஆட்சி செய்தவன் தமிழன். வடநாட்டில் கூட மனுநீதியை பின்பற்றியதில்லை.
தமிழர்கள் அனைவரும் கடந்த காலங்களில் மனுநீதியை பின்பற்றியவர்கள் தான். தற்போது இந்தியர்கள் அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி வருகிறோம். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெறுப்பு பிரச்சாரத்தை செய்துவரும் திருமாவளவனுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக வழியில் அறப்போராட்டம் நடைபெறும். இந்துக்கள் மீது அவதூறு பரப்பும் திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என உறுபடத் தெரிவித்தார்.