கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.60 லட்சம் இழந்த இருபது பேர் .
கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.60 லட்சம் இழந்த இருபது பேர் .
கூடுதல் வட்டி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி… நடுத்தெருவில் நிற்கும் மக்கள்!
ஈரோட்டில் அதிக வட்டி தருகிறார்கள் என்று மக்கள் பணம் கட்டிய நிலையில் 60 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அடுத்த தவுட்டுபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் தான் பவானி நகர கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வருவதாகவும், அங்குள்ள ஒரு திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால், 10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மக்களிடம் கூறியுள்ளார்.
அதனை நம்பிய, அந்தியூரை சேர்ந்த 20 பேர் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தனர். இந்நிலையில், பணத்தை வசூல் செய்த பாரதி அதற்காக டெபாசிட் செய்தவர்களுக்கு பவானி நகர கூட்டுறவு வங்கியின் பெயரில் போலி காசோலையை வழங்கி உள்ளார்.
ஆனால் குறிப்பிட்டபடி பணம் தராததால், தங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.