தேர்தல் செலவுக்கு நிதி மக்களிடம் வசூலிக்க மக்கள் நீதி மய்யம் முடிவு
தேர்தல் செலவுக்கு நிதி மக்களிடம் வசூலிக்க மக்கள் நீதி மய்யம் முடிவு
சட்டப்பேரவை தேர்தல் செலவுக்கு பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலர் மேலும் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்களில் பலரும் அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். மக்கள்நலனுக்காக கட்சியில் இணைந்துபணியாற்றும் சாதாரண நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, பிரச்சாரம் உட்பட சட்டப்பேரவை தேர்தலுக்கு செய்ய வேண்டிய செலவுகளுக்கு நிதி தேவைப்படும்.
மக்கள் நீதி மய்யம் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தேர்தலுக்குஆகும் செலவுகளை சமாளிக்கபொதுமக்களிடம் இருந்து நிதிவசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை வைத்து கரோனா காலத்தில் நிறைய பணியாற்றி உள்ளோம். தேர்தலுக்கும் பொதுமக்கள் நிதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றனர்.