குருப்பெயர்ச்சி 2020-2021 எப்பொழுது? எந்தெந்த ராசிகள் பலம் பெறுகின்றன?
குருப்பெயர்ச்சி 2020-2021.
நவகிரகங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் குருதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு ஒரு வருடம் ஆகும்.
ஒரு வருடம் முழுவதும் ஒரு ராசியில் இருந்து தனது சுப பலன்களை அந்த ராசிக்கு நின்ற ஆதியப்பத்திற்கு ஏற்ப அளிக்கக்கூடியவர்.
2020ஆம் ஆண்டில் எப்பொழுது குருப்பெயர்ச்சி நடைபெறுகின்றது?
மங்களகரமான சார்வரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 30ஆம் (15.11.2020) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் இரண்டாம் பாதத்தில் அதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு 09.50 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான சார்வரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 5ஆம் (20.11.2020) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் சஷ்டி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் இரண்டாம் பாதத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை பகல் 01.23 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இந்த குருப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் பலம் பெறுகின்றன?
குருதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக சுபச்செயல்களை செய்யக்கூடியவர். குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 5, 7 மற்றும் 9 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.
மகர ராசியில் இருந்து குருதேவர்
ஐந்தாவது பார்வையாக ரிஷப ராசியையும்
ஏழாவது பார்வையாக கடக ராசியையும்
ஒன்பதாம் பார்வையாக கன்னி ராசியையும்
இந்த வருடம் முழுவதும் பார்வையிட இருக்கின்றார்.
இந்த மூன்று ராசிகளுக்கும் இந்த வருடம் சுபச் செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைக்கூடி நல்ல பலனை அளிக்கும்.