சார்ஜ் செய்தால் 210 கிலோமீட்டர் மைலேஜ் தரும் புதிய ஸ்கூட்டர் அறிமுகம்
சார்ஜ் செய்தால் 210 கிலோமீட்டர் மைலேஜ் தரும் புதிய ஸ்கூட்டர் அறிமுகம்
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது ஹீரோ நிறுவனம்
ஹீரோ மோட்டார் நிறுவனம் நைக்ஸ் ஹெச் எக்ஸ் என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
பல ஆண்டுகள் ஆய்விற்கு பின்னர் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஆரம்ப விலை 64 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் பின்புற இருக்கை மடிக்கும் வகையிலும், முன்புறம் அதிக இடவசதியுடன் நைக்ஸ் வாகனம் இருக்கும் என்றும், ப்ளூடூத் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 210 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது எனவும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.