திருச்சி
முதல்வரை சந்திக்க அதிமுக எம்எல்ஏவுக்கு மறுப்பு. அதிமுக எம்எல்ஏ ஆவேசம்
புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5 மணிக்கு சென்னை செல்வதற்கு மீண்டும் திருச்சி விமானநிலையம் வந்தார். அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வெல்லமண்டிநடராஜன் உள்ளிட்டோர் விமானநிலையத்திற்குள் முதல்வருடன் சென்றனர்.
அப்போது அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும் அமைச்சர்களுடன் செல்ல முயன்றார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். தான் எம்எல்ஏ என அவர் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறுவதை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த எம்எல்ஏ ரத்தினசபாபதி நிருபர்களிடம் ‘ காலையில் இருந்த முதல்வருடன் இருந்தேன். அதிகாரிகள் தடுத்த நிறுத்தி விட்டனர். உள்நோக்கம் இருக்குமா என்பதே நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். உங்களை விரைவில் சந்தித்து பேசுவேன் என்றார்.