Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விராலிமலையில் 100 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையைத் தொடங்கி வைத்த முதல்வர்

விராலிமலையில் 100 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையைத் தொடங்கி வைத்த முதல்வர்

0

திருச்சி அருகே விராலிமலையில் ஐடிசி நிறுவனத்தில் 100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலை – முதல்வர் திறந்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்தில் அமைந்துள்ள ஐடிசி நிறுவனம் 1150 கோடி முதலீட்டில் 55 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிறுவனம் ஆகும்.

ஐடிசி நிறுவனத்தில் ஒருங்கிணந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தளவாடம் மேற்கொள்ளும் தொழிற்சாலையில் சுமார் 100 கோடி மதிப்பிலான ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை தமிழக எடப்பாடி பழனிச்சாமி  முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த தொழிற்சாலை மூலம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் புது மாவட்டத்தில் நேரடியாக 2200 கிராம புறமக்களும் மறைமுகமாக ஆயிரத்திற்டும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.
2015 ம் ஆண்டு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசும் ஐடிசி நிறுவனமும் உலகலாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.