திருச்சியில் முதல்வரை வரவேற்று வழியனுப்ப வேண்டும் : திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை.
திருச்சியில் முதல்வரை வரவேற்று வழியனுப்ப வேண்டும் : திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை செல்வதற்காக நாளை காலை 8 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார் .
திருச்சி வரும் முதல்வர் காரில் விராலிமலைக்கு செல்கிறார். ஐடிசியில் விரிவாக்கப்பட்ட பகுதியை திறந்து வைக்கும் அவர் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் முக்கியமான அங்கமான 1008 ஏக்கர் பரப்பளவு கவிநாடு கண்மாயை பார்வையிடும்,
முதல்வர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில்
அங்கு இதயநோய் சிகிச்சைக்கான ‘கேத்லாப்’ வசதியை திறந்து வைக்கிறார்.
பின் புதுக்கோட்டையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு மாலை 5.00 மணிக்கு சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வருகிறார்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தை சார்ந்த கழக நிர்வாகிகளும் கழக முன்னோடிகள் கழக உடன்பிறப்புகளும் தவறாமல் பங்கேற்று தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்று வழியனுப்பி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.