இளம் வீரர்களுக்கு எதிராக தோனி பேச்சு ?
இளம் வீரர்களுக்கு எதிராக தோனி பேச்சு ?இளம் வீரர்களுக்கு எதிராக தோனி பேச்சு ?
இளம் வீரர்களுக்கு எதிராக தோனி பேச்சு ?
எஸ்கே அணியில் இருக்கும் இளைஞர்களிடம் ஸ்பார்க் போதவில்லை, அதனால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேப்டன் தோனி பேசி உள்ளார்.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என்று யாருமே நேற்று சரியாக ஆடவில்லை.
நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வெறும் 125 ரன்கள் எடுத்தது. இதை எளிதாக சேசிங் செய்த ராஜஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் தோனி அணியில் அடிக்கடி வீரர்களை மாற்ற கூடாது. ஒரு வீரர் சரியாக ஆடவில்லை என்றதும் இன்னொரு வீரரை கொண்டு வர கூடாது. அடிக்கடி வீரர்களை தூக்கினால் அது சிக்கல் ஆகும். நான்கு அல்லது ஐந்து போட்டிகளுக்கு பின் எல்லாம் மாறிவிடும். நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
முதலில் வீரர்களுக்கு சமமாக வாய்ப்பு வழங்க வேண்டும். மூத்த வீரர்களுக்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும் . அவர்கள் சரியாக ஆடுகிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் அடிக்கடி வீரர்களை மாற்ற கூடாது.
அடிக்கடி வீரர்களை மாற்றினால் , அணிக்குள் ஒரு அச்சம் ஏற்படும். அந்த அச்சம் ஏற்பட கூடாது. அது தவறானது. இந்த சீசனில் எங்களால் சரியாக ஆட முடியவில்லை. சில இளைஞர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அவர்களிடம் எங்களால் ஸ்பார்க்கை பார்க்க முடியவில்லை.
இளைஞர்களிடம் வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு ஸ்பார்க் இல்லை. இதனால் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் தற்போது வந்திருக்கும் முடிவுகளின்படி பார்த்தால், அணியில் இருக்கும் இளைஞர்களுக்கு மீதம் இருக்கும் போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தற்போது இளைஞர்கள் மீது அணியில் எந்த பிரஷரும் இல்லை. இதனால் அவர்கள் மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்பப்படி ஆட முடியும். இதனால் அவர்கள் தங்களை நிரூபிக்க முடியும்.இதன் மூலம் புதிய பேட்டிங் லைன் அப் போன்ற விஷயங்களை யோசிக்க இளைஞர்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள்., என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவிற்கு அணியில் வாய்ப்பு வழங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஜெகதீசன் முதல் போட்டியில் நன்றாக ஆடினார். ஆனால் அதற்கு பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவிடம் இருந்ததா என்று தோனியை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
தோனிதான் எப்போதும் இளைஞர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால் அதே தோனி தற்போது இளைஞர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். தோனியின் இந்த பேச்சு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களே தோனியின் பேச்சை விமர்சனம் செய்துள்ளனர்.