Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்

0

https://trichyxpress.com/

ராசிப்பலன் – 29.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையீட்டால் தடைபட கூடும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க சிறிது காலமாகும்
உத்தியோகத்தில் பொறுமையுடன் நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கும். வீட்டில் ஆதரவு உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் திடீர் தனவரவு உண்டாகும். உற்றார் உறவினர்களின் உதவியால் சுபகாரியம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் பெருகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை இருக்கும். பெரியவர்களின் அன்பு கிடைக்கும். தொழிலில் சக ஊழியர்களின் அனுகூலம் இருக்கும். புதிய சம்பந்தமான வழக்கு விசயங்களில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி குறைந்தே இருக்கும். சுபகாரியங்களில் தடை தாமதங்கள் இருக்கும்.தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். தொழில் செய்பவருக்கு வேலைப்பளு குறையும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சீக்கிரம் முடிய வேண்டிய காரியம் காலதாமதம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள் அதுவே நல்லது. தொழிலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து விடுங்கள். வெளியூர் செல்வதை தவிர்த்து விடுங்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மனம் மகிழும் நிகழ்ச்சி நடக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.ஆடம்பரப் பொருட்களை வாங்க விரும்புவீர்கள்.நண்பர்களின் ஆலோசனை தொழிலில் வியாபாரத்தைப் பெருக வைக்கும். வருமானம் கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பண வரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடன்கள் நீங்கும். உத்தியோகம் செய்பவர்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் வரும்.உற்றார் உறவினர்கள் வழியில் வீட்டில் தேவையில்லாத செலவுகள் உண்டாகும். உடல் ரீதியில் கவனம் தேவை. தொழிலில் அலைச்சலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நண்பர்கள் தேவையாக உதவுவார்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் உண்டாகும்.விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வியாபாரரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். என்ன முயற்சி எடுத்தாலும் வெற்றியை கொடுக்கும். ஆடம்பர பொருட்களை வாங்க பெண்கள் ஆர்வம் கொள்வார்கள். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.தொழில் ரீதியில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்யுங்கள் அதுதான் நல்லது. வீட்டில் ஒற்றுமை குறைந்து காணப்படும். தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். தொழில் உடன் இருப்பவர்களால் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பெண்களுக்கு பணிச்சுமை நீங்கும்.

Leave A Reply

Your email address will not be published.